உலகப் பிரசித்திபெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர்த்திருவிழாவானது ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் பிறகு நடப்பது வழக்கம். அந்த வகையில், இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில், 'ஆரூரா தியாகேசா' என்ற கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகமாக வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். பெரிய அளவிலான எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதால் 2,000 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.