இடைத்தேர்தல் தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நடத்தப்பட்ட கருத்து கேட்புக் கூட்டம் நிறைவு பெற்றது.தேர்தல் நடத்துவது பற்றிய அறிக்கையை இன்று மாலைக்குள் தர வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கேட்டிருந்த நிலையில்இன்று மதியம் 1 மணிக்குதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில்திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதில்,திமுக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள், திருவாரூர் இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் கஜா புயல் நிவாரணப்பணிகள் முடிந்த பிறகு நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இடைத்தேர்தல் நடத்தலாமா... வேண்டாமா... திமுக, அதிமுக-வின் பதில் என்ன?
Advertisment