Advertisment

திருவாரூரில் மக்களை நெகிழவைத்த ஆழி தேர்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழி தேரோட்டம் நேற்றுகோலாகலமாக ஓடி நின்றிருக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தேரான திருவாரூர் தேரோட்டத்தைக் காண தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர்.

Advertisment

festival

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழகத்தின் சைவத் திருக்கோயில்களில் பழமையும் பெருமையும் மிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் மிகப் பழமையானது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள் இந்தக் கோயிலில் 9 ராஜ கோபுரங்கள் ஒன்பது விமானங்கள் 12 பெரிய சுவர்கள் மூன்று பெரிய பிரகாரங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சன்னிதிகள் என வரலாற்றுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது திருவாரூர் திருக்கோயில்.

Advertisment

festival

கோயிலின் பரப்பு சுமார் 18 ஏக்கர், இக்கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் எதிரே உள்ள கமலாலய குளத்தின் பரப்பு 20. ஆழித்தேர் என்றால் அது திருவாரூர் தேரையே குறிக்கும் கடல் போல பரந்து விரிந்த பெரிய தேர் என்பதனாலேயே இத்தேர் ஆழி தேர் ஆயிற்று. ஆசியாவிலேயே மிகப்பெரிய இரண்டாவது ஆழித்தேர் திருவாரூர் தேர் ஆகும். எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் தேர் அலங்கரிக்கப்பட்ட தேர் 96 அடி உயரத்தையும் 350 டன் எடையும் கொண்டது.

festival

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பெரும்பாலான கோயில்களில் வடிவமைக்கப்படும் தேர்தல் நான்கு அல்லது ஆறு பட்டைகளை கொண்டதாகவே இருக்கும் ஆனால் திருவாரூர் ஆழித்தேர் எட்டு பட்டைகளை கொண்ட அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் மர சட்டங்களால் அமைந்திருந்த தேர் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இழுத்தால்தான் தேர் ஓடும் நிறைவுக்கு வர சுமார் ஒரு மாதங்களுக்கு மேல் ஆகும், தேரோட்டத்தில் பல மனித உயிர்கள் பலிகேட்கும், ஆயிறக்கணக்கான அப்பாவி கூலித்தொழிலாளிகளுக்கு சாட்டையடி சானிப்பால் அடி விழும் என்ற நிலை இருந்தது. தமிழக முதலமைச்சராக வந்த கலைஞர் புதிய ஆழித்தேரை வடிவமைத்தபோது திருச்சி பெல் நிறுவனம் மூலம் எளிதில் சொல்லக்கூடிய இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஹைட்ராலிக் பிரேக்குகளும் பொருத்தப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஓடுகிறது.

festival

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இதன் காரணமாக திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஒரே நாளில் நிறைவடைவது வழக்கமாகிவிட்டது. 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்தால் தான் நகரும் என்ற நிலையிலிருந்து ஆழித்தேர் அறிவியல் தொழில்நுட்பம் காரணமாக 3000 பேர் வடம் பிடித்தாலே போதுமானது என்ற நிலை தற்போது உருவாகி விட்டது.

இந்த சூழலில் இன்று ஆழித் தேரோட்டம் மிக அற்புதமாக இன்று ஏப்ரல் 1 ம் தேதி காலை 5 மணிக்கு சிறிய தேர்கள் சுற்றி வந்து விட்டன. பெரிய தேர் ஏழு மணிக்கு கிளம்பி தெற்குவீதி நகர்ந்த போதும் ஓரத்தில் இருந்த மண்ணில் இறங்கியது. 9 மணிக்கு இறங்கிய தேர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2.40 க்கு மீண்டும் வீதிக்கு வந்து கோயிலை சுற்றி நிலைக்கு சென்றுள்ளது.

சுமார் 3 லட்சம் பேர் தேர் திருவிழாவை கண்டு கொண்டது திருவாரூருக்கு மேலும் புகழ் சேர்த்தது. தேர்தல் நேரம் என்பதால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரமுகர்களும் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து கொண்டனர்.

Festival Thiruvarur tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe