ADVERTISEMENT

அதிமுக வேட்பாளர் யார்? - முதல்வர் பழனிச்சாமி பதில்

06:17 PM Jan 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 52 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இடையடுத்து இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

ADVERTISEMENT

மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் யார் என்ற அறிய கட்சியினர் கட்சி அலுவலகம் வாசலில் கூடியிருந்தனர்.

ஆனால், நேர்காணலுக்கு பின்னர் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘’தேர்தலை சந்திக்க அதிமுக தயார். திருவாரூர் தேர்தலை சந்திக்க அச்சமில்லை. எந்த தேர்தலை கண்டும் அதிமுக அச்சப்படாது. திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும். வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அஞ்சுகிறோம் என்ற அர்த்தமில்லை. அதிமுக வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT