Advertisment

வரதட்சணை கொடுமை; இளம்பெண் தீ குளிப்பு; திருவாரூர் சோகம்

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் தன் உடம்பை எரித்து தற்கொலை முயற்சித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

c

திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மைதிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருணம் நடந்த சில மாதங்களுக்குப்பிறகு மைதிலியை தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் அருணும், மாமனார் இளங்கோவும் மாமியார் சுபாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சண்டை போட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்தவர் இன்று அதிகாலை தன் உடம்பில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார் மைதிலி.

Advertisment

அருகில் உள்ளவர்கள் மைதிலியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினரிடம் மைதிலி தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe