Advertisment

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக்கண்டித்து நடந்த பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் பேரணியாக சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.

Advertisment

h

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க பேரணியாக வந்து நிகழ்ச்சியில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாக இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், ஹட்ரோரோகார்பன் திட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும். என முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்தான கோரிக்கையையும் விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe