Advertisment

 திருவாரூர் மாவட்டத்தில் 8  கிராமங்களில் வீடுகளில் கருப்புக்கொடி

திருவாரூர் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

h

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபையில் சட்டத்துறை அமைச்சரோ," ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது," என்று அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு தமிழக டெல்டா பகுதிகளில் மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கி பீதியை கிளப்பியுள்ளது. மத்தியில் நாங்க தான் இருக்கிறோம், மாநிலத்தில் அதிமுக அரசு நடந்தாலும் அது எங்களின் கண் அசைவுக்கு இனங்கியே ஆட்சிபுரிய வேண்டும் என சொல்லாமல் சொல்லிவருகிறது.

Advertisment

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்களது இடங்களில் செயல்படுத்த விடமாட்டோம்," எங்க இடத்தை தேர்வு செய்ய நீங்க யார், பாராளுமற்றத்தில் நாங்கள் குடியேறினால் சும்மா விடுவீங்களா, " என்று ஆவேசமாக கூறி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூர், வடபாதி, பனங்குடி, தென்பாதி, காவாலக்குடி, திருமாஞ்சோலை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் மனநிலையை புறிந்துகொள்ளாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குளைத்து, மண்ணையும், விவசாயத்தையும் நம்பியே காலத்தை கழித்துவரும் இம்மக்களை வஞ்சித்து ஆட்சி செய்ய துடிக்கும் மத்திய மாநில அரசுகள் யாருக்கானது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.

Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe