ADVERTISEMENT

வரும் 7ம் தேதிக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால் ..... ஜாக்டோ ஜியோ  எச்சரிக்கை

08:50 AM Dec 17, 2018 | selvakumar

ADVERTISEMENT

வரும் 7ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மறுதினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திருவாரூரில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் மற்றம் உயர்நீதிமன்றம் நிகழ்வுகள் விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர்கள், மற்றம் அரசு சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு போராட்ட ஒத்தி வைப்பு குறித்து நீதிமன்ற நிகழ்வுகளை விளக்கி பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் அளித்த உறுதியை அரசு செயல்படுத்த வில்லை என்பதால் அரசு அவதூறு வழக்கு போட்டுள்ளது. கடந்த மாதம் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் அவகாசம் கேட்டதற்கு நீதிபதி மறுத்து வருகிற ஜனவரி மாதம் 7ம் தேதிக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதி கேட்டு கொண்டதின் அடிப்படையில் ஜனவரி 7ம் தேதி வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 7ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அன்றைய தினமே நீதிமன்றத்திலேயே ஜாக்டே ஜியோ அமைப்பினரின் கால வரையற்ற போராட்டத்தின் அறிவிப்பை வெளியிடுவோம் என மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT