thiruvannamalai temple

Advertisment

mso-fareast-font-family:"Times New Roman";color:black;background:white;

mso-fareast-language:EN-IN">திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. உலகம் முழுவதும் இருந்து இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கரோனாவை முன்னிட்டு பொதுமுடக்கத்துக்கு முன்பே மத்திய அரசு அமல்படுத்திய மதவழிபாட்டு தலங்கள் மூடல் உத்தரவை தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. ஆகமவிதிப்படியான பூசைகள் மட்டும் தொடர்ச்சியாக நடந்து வந்தன.

mso-bidi-font-family:"Times New Roman";color:black;mso-fareast-language:EN-IN">

mso-fareast-font-family:"Times New Roman";color:black;background:white;

mso-fareast-language:EN-IN">மாதந்தோறும் பௌர்ணமி அன்று மட்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை கிரிவலத்துக்கு 3 முதல் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். அப்படிப்பட்ட கிரிவலம் கடந்த 5 மாதங்களாக தடை செய்யப்பட்டன. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் செப்டம்பர் 1ந் தேதி திறக்கப்பட்டன. அதன்படி அண்ணாமலையார் கோவிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன.

mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";

color:black;mso-fareast-language:EN-IN">

Advertisment

mso-fareast-font-family:"Times New Roman";color:black;background:white;

mso-fareast-language:EN-IN">பக்தர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். செப்டம்பர் 1ந் தேதி கிரிவலம் நாளாகும். மதவழிபாட்டு தலங்களை திறந்து பக்தர்கள் அனுமதிக்க அரசாங்கம் அனுமதி வழங்கினாலும் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

mso-bidi-font-family:"Times New Roman";color:black;mso-fareast-language:EN-IN">

mso-fareast-font-family:"Times New Roman";color:black;background:white;

mso-fareast-language:EN-IN">இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கடந்த 5 மாதமாக மக்கள் அடைந்து கிடந்தனர். சுற்றுலா தலங்கள் கூட திறக்கப்படவில்லை. தற்போது இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து அனுமதி போன்ற விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கிரிவலத்துக்கு அனுமதி தந்தால் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். அதனை தடுக்கவே இந்த மாதமும் கிரிவலம் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்கள்.

mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";

color:black;mso-fareast-language:EN-IN">

mso-fareast-font-family:"Times New Roman";color:black;background:white;

mso-fareast-language:EN-IN">தொடர்ச்சியாக 6வது மாதமாக கிரிவலம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அதோடு கிரிவலப்பாதையில் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல முடியாதபடி காவல்துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

mso-fareast-font-family:"Times New Roman";mso-bidi-font-family:"Times New Roman";

color:black;mso-fareast-language:EN-IN">