ADVERTISEMENT

அதிகாரவர்க்கத்துக்கான தீபத்திருவிழா - பொதுமக்கள் குற்றச்சாட்டு

09:31 AM Nov 13, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டம் வரும் 14 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாள் நடைபெறும் இத்திருவிழாவின் இறுதியில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதனை தரிசிக்க ஆந்திரா, கர்நாடகா , பாண்டிச்சேரி உட்பட பல மாநிலங்களில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக கோயில் நிர்வாகத்துடன் இணைந்து பல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக மூன்று ஆய்வுக் கூட்டங்களை துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நடத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக நேற்று நவம்பர் 12 ந்தேதி மாலை திருவண்ணாமலை வாழ் பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கும் கூட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நடத்தினார்.

ADVERTISEMENT

மாலை 3 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்ட இந்த கூட்டத்திற்கு பெரும்பான்மையான பொதுமக்களும் இயக்கங்களும் வரவில்லை. முறையாக அதுப்பற்றி தெரிவிக்காததாலே வரவில்லை எனக்கூறப்படுகிறது. மாலை 3.30 மணியளவில் கூட்டம் நடைபெற இருந்த அரங்கத்திற்கு கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி வருகை தந்திருந்தார். சரியாக 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வருகை தந்து கூட்டத்தை தொடங்கினார். அப்பொழுது கூட்ட அரங்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரும், மருத்துவத்துறை சார்ந்த சிலரும், காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகள் இருவர் மட்டும் வந்து அமர்ந்து இருந்தனர். மற்ற வேறு எந்த அரசுத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 4. 30 மணியளவில் அவசரமாக வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருடன் அமர்ந்து பொதுமக்கள் கூறிய ஆலோசனைகளை குறிப்பெடுத்துக் கொண்டார்.

திருவண்ணாமலை நகரில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா கார்த்திகை தீபத்திருவிழா. பொது மக்களின் பங்களிப்போடு நடக்கும் இவ்விழாவை அறநிலையத்துறை அதிகாரிகள் நிர்வாகம் செய்வது பாதுகாப்பு போன்ற பணிகளை மட்டுமே அவர்கள் செய்கின்றனர் . கோயிலுக்கு அலங்காரம் முதல் அன்னதானம் வரை பக்தர்களுக்கு செய்யப்படும் அனைத்தும் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் பாரம்பரியமாக பல ஆண்டுகளாகவே செய்துவருகின்றனர். ஆனால் அவர்களிடமும் பொதுமக்களிடமும் ஆலோசனைகள் பெற வேண்டிய கூட்டத்தில் அதிகாரிகள் யாருமே வந்து கலந்து கொள்ளாதது, கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்ட பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தீபத்திருவிழா பொதுமக்களுக்கான விழா என்கிற இடத்தில் இருந்து அதிகாரிகளுக்கான, அதிகாரிகளின் குடும்பத்திற்கான, அதிகார வர்க்கத்தினருக்கான விழாவாக மாற்றமடைந்துள்ளது என கூட்டத்தில் கலந்துக்கொண்ட திருவண்ணாமலை நகர பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT