திருவண்ணாமலையில் விசாரணை கைதி சிறையில் மரணமடைந்தது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29/04/2022) விளக்கம் அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தங்கமணி என்ற விசாரணை கைதி கிளைச்சிறையில் உயிரிழந்தது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (29/04/2022) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
அப்போது, சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறையில் இருந்த கைதி தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பின் உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.