Advertisment

கரோனா தாக்குதல் எனப் பொய்யான தகவல்களைப் பரப்பிய கல்லூரி மாணவர் கைது

கரோனா வைரஸ் நோய் தொடர்பாக பொய்யான தகவல்களை, மக்களை மிரட்சியடைய செய்யும் தவறான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த பின்பும் சிலர் கரோனா வைரஸ் தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்பது வேதனையானது.

Advertisment

 taluk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, அண்டப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த சந்திரன் என்பவருக்கு கரோனா வைரஸ் பரவி இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு தகவல் பரவியது. அதனால் அப்பகுதி மக்கள் எச்சிரிக்கையாக இருங்கள் எனச் சொல்லப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழு அங்குச் சென்று விசாரித்தபோது யாரும் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பொய்யைப் பரப்பியது யார் என போலிஸார் தேடினர். அதன்படி அதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பயிலும் 20 வயதான வெங்கடேசன் என்பது தெரியவந்து அவரை செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் பொய் தகவலை பரப்பியது தொடர்பான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 3 பேரும், ஈரோடு பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் என பொய்யான தகவல்களை சமூக வளைத்தளங்களில் பரப்பியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

police taluk thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe