திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணிபுரிந்து வரும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சில நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றவர் இரண்டு நாட்களுக்கு முன்பு பணியில் மீண்டும் சேர்ந்துள்ளார். மார்ச் 19ந்தேதி வழக்கம்போல் பணிக்குச் சென்று விட்டு மாலை காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
செல்போன் மூலம், இரவு தனது தோழிகளைத் தொடர்புகொண்டு, நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடிச்சிட்டேன் எனச்சொல்லி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் விரைந்து வந்து காவலர் குடியிருப்பில் மயங்கிக் கிடந்த அந்த பெண்காவலரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஊருக்குச் சென்று வந்ததிலிருந்து சரியாகவேயில்லை, யாரிடமும் சரியாகப் பேசவில்லை. ஏதோ மனக் குழப்பத்திலிருந்தார் எனத் தகவல் சொல்லியுள்ளனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.