மூக்கு போடி சாமியார் உயிரிழந்தார்.சமீபகாலமாக
சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த பூமி திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோயிலால் திருவண்ணாமலை புகழ்பெற்று விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், அதில் அரசியல், திரைத்துறை, தொழில்துறை, நீதித்துறை பிரபலங்கள் உட்பட அரசுத்துறை உயர் அதிகாரிகள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது சாதாரண நிகழ்வாகிவிட்டது. அப்படி வரும் மக்கள் கவனத்தை பெரிதும் கவர்ந்தவர் மூக்குப்பொடி சாமியார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mooku podi 1_0.jpg)
​
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உடல்நிலை பாதிக்கப்பட்ட மூக்குப்பொடி சித்தர் ரமணாஷ்வர்மம் அருகே உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். இரவு நேரங்களில் அங்கேயே அவர் உறங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகம் செய்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கத்திலேயே அவர் இறந்துள்ளார்.
நான்கு மணிக்கு ஆசிரம பணியாளர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக ஆசிரம நிர்வாகிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக லாயர் சந்திரமோகன் அங்கு சென்று மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது உறுதியானது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதன்பின் அவரது குடும்பத்தாருக்கும், தீவிர பக்தர்களுக்கும் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அவரது குடும்பத்தார் தற்போது திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். அவர்கள் தாங்கள் மூக்குப்பொடி சாமியாரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதாக கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களது பக்தர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் திருவண்ணாமலையிலுள்ள தனியார் திரையரங்க உரிமையாளர் தனக்கு சொந்தமான இடத்தை மூக்குப்பொடி சித்தரை அடக்கம் செய்ய கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அடிப்படையில் இன்று மாலை நகரத்தின் மையத்தில் உள்ள அந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அவரது மறைவு காரணமாக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mookupodi sidhar_1.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)