காதல் திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு. விரக்தியடைந்த காதல் ஜோடி மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த நீலாம்பரி மற்றும் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.இதனால் விரக்தியடைந்த இருவரும், போளூர் சம்பத்கிரி மலையில் இருந்து கீழே குதித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruvannamalai 5555.jpg)
அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் சிக்கிய காதல் ஜோடியை சிறுகாயங்களுடன் மீட்ட பொதுமக்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காதல் ஜோடியை சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us