தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட வழூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தனசேகர். விவசாயியான இவர் இரு மனைவிகளோடு வழூரில் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் தனசேகர் தனது மனைவிகள் செல்வி, காஞ்சனா ஆகிய இருவரையும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகபோட்டியிட வைத்தார்.இதைத் தொடர்ந்து செல்வி வழூர் அகரம் கிராம தலைவருக்கும், மற்றொரு மனைவியான காஞ்சனா கோவில் குப்பம் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம் (10.50PM)
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (383/515)
அதிமுக கூட்டணி: 192 முன்னிலை
திமுக கூட்டணி: 190 முன்னிலை
அமமுக: 1 முன்னிலை
ஒன்றிய கவுன்சிலர் பதவி (2,421/5067)
அதிமுக கூட்டணி; 1,009 முன்னிலை
திமுக கூட்டணி: 1,207 முன்னிலை
அமமுக: 50 முன்னிலை
பிற கட்சிகள்- 155 முன்னிலை