Skip to main content

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை ஆடியோ. அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள். பின்னணி என்ன ?.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளை எச்சரிக்கும் விதமாக, வீடு கட்டுவதற்கான பணிகளுக்கான ஆர்டரை தந்து அதுப்பற்றிய ரிப்போர்ட் எனக்கு தரனும் இல்லைன்னா நீங்க வேலையில் இருக்கமாட்டிங்க. வரும் திங்கட்கிழமை எனக்கு ரிப்போர்ட் வேணும், இல்லைன்னா நீங்க வேலையோட வீட்டுக்கு போறிங்களா?, இல்லாம போகனும்மான்னு முடிவு செய்துக்குங்க என பேசிய ஆடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

collector

 

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை ஆடியோ. அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள். பின்னணி என்ன ?.

 

இந்த ஆடியோவை கேட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையினர் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சேத்பட் ஊராட்சியில் ஒரு அதிகாரி மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக சமூக வளைத்தளங்களில் செய்தி பரிமாறிக்கொள்ளப்படுகிறது.

இதுப்பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரப்பில் நாம் விசாரித்தபோது, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் உரையாட வாட்ஸ்அப் குழுக்கள் வைத்துள்ளார். அனைத்து அதிகாரிகளுக்கும் ஏதாவது தகவல் சொல்ல வேண்டியது இருந்தால் ஒவ்வொருவருக்கும் போன் செய்து சொல்ல முடியாது என்பதால் வாட்ஸ் அப் குருப்புகளில் டைப் செய்த தகவலாகவோ அல்லது வாய்ஸ் மெசேஜ் தருவார்.  அப்படி சொல்லப்பட்டது தான் அந்த ஆடியோ, குழுவில் உள்ள யாரோ ஒரு அதிகாரி அதனை வெளியே பகிர்ந்துள்ளார்.

திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வரும் பெரும்பாலான மக்களின் கோரிக்கை தமிழகரசு தரும் இலவச வீடு, பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் கழிப்பறை வசதி போன்றவை தங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. அதோடு, இலவச வீடு வேண்டும்மென்றால் பணம் வேண்டும் என அதிகாரிகள் கேட்கிறார்கள் என்கிறார்கள். இதுப்பற்றி கிராம அளவில் உள்ள பஞ்சாயத்து செயலாளர்களிடம் விசாரித்தால் பி.டி.ஓ அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பணம் கேட்கிறார்கள் என்கிற குற்றம் சாட்டுகிறார்கள், அதிகாரிகள் ஆர்டர் தந்தால் தானே நாங்கள் மக்களிடம் தருவதற்கு எனச்சொல்கிறார்கள்.

இதுப்பற்றி துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் பயனாளிகளை அலைய வைக்காதீர்கள் எனச்சொல்லியும் அதிகாரிகள் கேட்கவில்லை. தொடர்ச்சியாக மக்களிடம்மிருந்து புகார் வரவே தான் கோபமாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது, செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்தால் ஏன் கேள்வி எழப்போகிறது என்கிறார்கள்.
 

 

ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்தவர்களோ, நாங்கயென்ன வேலை செய்யாமலா இருக்கிறோம். இங்க வந்து பாருங்க, எவ்வளவு வேலை பென்டிங் இருக்குன்னு. ஆட்கள் பற்றாக்குறை, மத்திய – மாநில அரசுகள் புதிய புதிய திட்டங்கள் போட்டு அதை நடைமுறைப்படுத்த, கண்காணிக்க, பணியை முடிக்க, அதுப்பற்றிய அறிக்கையை அனுப்ப என வேலைகள் குவிந்தள்ளது. உடனே ஒரு வேலையை முடிங்கன்னு சொன்னா எப்படி முடியும் எனக்கேட்கிறார்கள்.

இரண்டு ஆண்டுக்கு முன்பு மாவட்ட ஆட்சியருக்கும் – அரசு ஊழியர்களுக்குமான மோதலால் தமிழகம் முழுவதும்மே போராட்டத்தை நடத்தினார்கள் அரசு ஊழியர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு, அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கண்ணாடிகளை அடித்து உடைத்தனர், அதில் பணியில் இருந்த சில ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இருதரப்புக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பாடானது. தற்போது இந்த ஆடியோவை கேட்டு சங்க நிர்வாகிகள் என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தியுள்ளனர். மீண்டும் ஒரு மோதல் உருவாகிவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்மோ என பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்