ADVERTISEMENT

கிரிவலம் செல்ல தடை– மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

06:39 PM Apr 04, 2020 | kalaimohan

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள், மலையைக் கடவுளாக நினைத்து மலையின் சுற்றுளவான 14 கி.மீ தூரத்தை வலம் வருவார்கள். பௌர்ணமியன்று மட்டுமல்லாமல் தினசரியும் வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வருவார்கள்.

ADVERTISEMENT


இந்நிலையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மதவழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் பொதுமக்கள், பக்தர்கள் செல்லாத வண்ணம் மூடப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல் 7ந்தேதி பௌர்ணமி வருகிறது. அது ஏப்ரல் 8ந் தேதி வரை உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆன்மீகவாதிகள், பொதுமக்கள் யாரும் கிரிவலம் வரக்கூடாது. உள்ளுர் மக்களும் கிரிவலம் வர முயலக்கூடாது என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT