திருவண்ணாமலை மாவட்டம், கடலாடியை அடுத்த சிறுவள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி செவ்வந்தி. இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். இந்த தம்பதியருக்கு 5 வயதான மதுஸ்ரீ , 3 வயதான தனுஸ்ரீ என 2 மகள்கள் உள்ளனர். 5 வயதாகும் மூத்த மகள் அருகிலுள்ள பள்ளியில் 1 ஆம் வகுப்பும், மற்றொரு குழந்தை வீட்டிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயம் மற்றும் சமையல் தொழில் செய்கிறார் வெங்கடேசன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/child murder1.jpg)
சம்பாதிக்கும் பணத்தை தருவதில்லை, ஒருநாள் வேலைக்கு போனால் 4 நாள் வீட்டிலேயே இருக்கிறாயா நியாயமா என செவ்வந்தி தனது கணவரிடம் கேட்க, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால், செவ்வந்தி தனது இரு மகள்களை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மே 4ந்தேதி அம்மாவசை பூசை அருகில் உள்ள கோயிலில் நடப்பதால் அங்கு செல்லுங்கள் என தனது தாய், தந்தையை அனுப்பிவைத்துள்ளார். இரவே தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனை மே 5ந்தேதி மதியம் வீட்டுக்கு வந்த செவ்வந்தி பெற்றோர் பார்த்துவிட்டு கத்தி கதறி அழ அக்கம் பக்கத்தினர் வீட்டு முன் கூடியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/child murder2.jpg)
இதுப்பற்றி அவர்கள் உடனடியாக கடலாடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி, அவற்றை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு விசாரணையை துவங்கியுள்ளனர்.
இதுப்பற்றி வெங்கடேசனுக்கு தகவல் சொல்ல போதையில் இருந்தவன் வந்து தனது மனைவி, மகள்கள் உடலை பார்த்து கதறி அழுதுள்ளான்.
தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொள்ள காரணம் கணவன் வேலைக்கு செல்லாததுதான் காரணமா, வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என விசாரணையை நடத்த துவங்கியுள்ளனர் போலிஸார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)