Advertisment

ஒரு மாஸ்க் விலை 100 ரூபாய்...  அபராதம் மற்றும் விழிப்புணர்வு வாகன பயணம்!

THIRUVANNAMALAI COLLECTOR ANNOUNCE

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 8ந் தேதி கணக்குப்படி 840 கரோனா நோயாளிகள் உள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் முகத்துக்கு மாஸ்க் அணிந்துதான் வெளியே வரவேண்டும், மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அந்தந்த நகராட்சி அதிகாரிகளும், கிராமபுறங்களில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களும் இந்த அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரத்தில்ஒரு ரோந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20 வாகனங்கள் மாவட்டம் முழுவதும் வலம் வரவுள்ளன. இந்த வாகனத்தில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு வருவாய்த்துறை அலுவலர், ஒரு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் (நகரப்பகுதிகளுக்கு நகராட்சி ஊழியர்) இருப்பர். இவர்கள் மாஸ்க் இல்லாமல் வரும் பொதுமக்களுக்கு, அந்த இடத்திலேயே நிறுத்தி 100 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

அபராதம் விதித்து பணத்தை வாங்கிக்கொண்டு பில் தரும்போது, உடன் ஒரு மாஸ்க் தரவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, எஸ்.பி சிபிசக்கரவர்த்தி தொடங்கி வைத்தனர். ஜூன் 18ந்தேதி முதல் இந்த வாகனங்கள் எல்லை பிரித்துக்கொண்டு மாவட்டம் முழுவதும் வலம் வருகிறது.

corona virus road awarness thiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe