திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலூக்கா விண்ணமங்கலம் தேசிய சாலையில் ஜெயகிருஷ்ணன் என்பவரின் மனைவி ருக்குமணி அம்மாள் நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த பெண் கழுத்திலிருத்த மூன்று சவரன் தங்க நகையைஅறுத்துக்கொண்டு வாகனத்தில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

thiruvannamalai chain issue

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதுகுறித்து அவர் தனது குடும்பத்தார்க்குத் தகவல் சொல்லியுள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஆம்பூர் வட்டம் காவல்நிலையத்துக்குத் தகவல் தந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பட்ட பகலில் இருசக்கர வாகனங்கள் திருட்டு, செல்போன் கொள்ளைகள், வீடுகளில் திருடுவது என்பதைத் தொடர்ந்து மீண்டும் பெண்களின் கழுத்தில் உள்ள தாலிச் சரடுகள், சங்கிலிகளைக் குறித்துவைத்துள்ளனர் இருசக்கர வாகனத்தில் வரும் தலைக்கவசம் அணிந்த கொள்ளையர்கள்.