திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவின் 7- வது நாளான இன்று (07.12.2019) மகாதேரோட்டம் நடைபெற்றது. இதில் காலை விநாயகர் தேர், முருகர் தேர் மாடவீதிகளில் வலம் வந்தன. இந்நிலையில் மாலை 03.00 மணியளவில் உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் தேரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை இழுத்து இரவு 09.00 மணிக்கு நிலைக்கு வந்தது. அதன் பிறகு இரவு 10.00 மணியளவில் அம்மன் தேர் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 7 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.