Advertisment

20 ஆண்டுகளுக்கு பிறகு 35 லட்சத்தில் போடப்பட்ட சாலை... மறுநாளே மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 After 20 years, the road was built at a cost of 35 lakhs... The shock awaited the people the next day!

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு 20 வருடங்கள் கழித்து சாலை போடப்பட்டது அந்த பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் போடப்பட்ட சாலை தரமற்று கையில் சுருட்டி எடுக்கும் நிலையிலிருந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதில், '20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதியதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு நமது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 2,269 கோடி ரூபாய் நிதியாக வழங்கியுள்ளது. தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்தஅரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

Advertisment

Road thiruvannaamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe