ச்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய் வந்தவர்கள் மே 6ஆம் தேதி வரை 45 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மே 6ஆம் தேதி கூடுதலாக 7 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

Advertisment

இதில் 10 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஒருவர் குணமடைந்தாலும் இறந்துவிட்டார். ஆக, தற்போது 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று வந்தவர்கள் என இதுவரை 2,300 பேர் சொச்சம் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை 21 இடங்களில் தனிமைப்படுத்தி வைத்து பரிசோதனை நடத்தியுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வரவர பாசிட்டிவ் என வந்தவர்கள் மருத்துவமனைக்கும், நெகட்டிவ் ரிசல்ட் வந்தவர்களை வீட்டுக்கும் அனுப்பிவைக்கின்றனர்.

இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரவர நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.