
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது மூவாயிரத்தைக்கடந்திருக்கிறது.என்றுமே இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் இன்று 266 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1,458 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அருகே இயங்கி வந்ததிருவான்மியூர் காய்கறிச் சந்தை மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தச் சந்தையானது மூன்றுஇடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.அதன்படி சந்தையின் வாகன நிறுத்துமிடம், வடக்கு மாடவீதி, கிழக்கு மாட வீதி ஆகிய 3 இடங்களுக்குத் திருவான்மியூர் காய்கறிச் சந்தை மாற்றப்படும் எனவும், இந்தப் புதிய இடங்களில் மே 6 ஆம் தேதி முதல் சந்தை செயல்படும்எனவும்சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Follow Us