ADVERTISEMENT

’20 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது’- திருமாவளவன் 

11:40 PM Oct 28, 2018 | bagathsingh

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்று இருப்பது இந்திய அரசின் வெளி விவகார கொள்கைக்கு ஏற்பட்டு இருக்கிற பின்னடைவாகும்.

ADVERTISEMENT


இந்திய அரசின் ஆதரவாக செயல்பட்டு கொண்டு இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை நெருக்கடி மூலம் பதவியிலிருந்து இறக்கி தன்னுடைய அரசியல் எதிரியான ராஜபக்சேவை பதவியில் அமர்த்தி இருக்கிறார் மைத்திரிபால சிரிசேனா.


சீன பேரரசு மற்றும் இந்திய அரசின் தலையீடு காரணமாக பிரதமர் பதவியை ராஜபக்சே ஏற்று இருக்கிறார்.

சம்பந்தன் அவர்களுடைய தலைமையிலான கூட்டமைப்பு மிகுந்த நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் போல் இல்லாமல் தொலை நோக்கு பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் .

18 எம்எல்ஏ க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். 18 எம்எல்ஏ க்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்.

20 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. மதசார்பற்ற அணியில் திமுகவுக்கு அதரவு அளிப்போம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற அணி அமைத்து அதில் போட்டியிடுவோம். குடியரசு தலைவருக்கு உரிய மரியாதை பிஜேபி யினர் வழங்குவது இல்லை. அவர் சிறுபான்மை இனத்தவர் என்பதால் அவமதிப்பு செய்கின்றனர் என்றார்.

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT