Advertisment

வெற்றி தமிழர் பேரவையின் ''திருவள்ளுவர் விழா'' 

வெற்றித் தமிழர் பேரவையின் மகளிர் அணி சென்னை அடையாறில்இருக்கும் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய திருவள்ளுவர் திருவிழா இன்று மாலை 5.30மணிக்கு தொடங்கியது.

Advertisment

விழாவில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிப்பேரரசு வைரமுத்து,திமுகநாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவின்தொடக்கத்தில் மூன்று வயது குழந்தை தமிழ்தாய் வாழ்த்து பாட விழா தொடங்கியது.பெண்கள் திருக்குறள் பாடி குரல் பறையிசை என்கின்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். அதன்பிறகு திருக்குறளை வைத்து குரல் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

சம காலத்துக்கும் பொருந்தும் மறையாகதிருக்குறள் இருக்கிறது. அதை யாராலும் அழிக்க முடியாது என்று கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்.

தொடர்ந்து திருவள்ளுவர் என்ற அடையாளமானது காவி சாயம் போன்று அரசியல் சாயம் பூசப்பட்டு தனித்த ஒருவருக்காக மட்டுமே அடையாளம் காட்டப்படும் பொழுது வள்ளுவர் அனைவருக்குமான உலகப்பொதுமறை இயற்றியவர் என்ற விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த விழாவானது நடந்து முடிந்தது.

Festivals thirukural vairamthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe