Skip to main content

வெற்றி தமிழர் பேரவையின் ''திருவள்ளுவர் விழா'' 

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

வெற்றித் தமிழர் பேரவையின் மகளிர் அணி சென்னை அடையாறில் இருக்கும் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய திருவள்ளுவர் திருவிழா இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது.

விழாவில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிப்பேரரசு வைரமுத்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவின் தொடக்கத்தில் மூன்று வயது குழந்தை தமிழ்தாய் வாழ்த்து பாட விழா தொடங்கியது. பெண்கள் திருக்குறள் பாடி குரல் பறையிசை என்கின்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். அதன்பிறகு திருக்குறளை வைத்து குரல் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

சம காலத்துக்கும் பொருந்தும் மறையாக திருக்குறள் இருக்கிறது. அதை யாராலும் அழிக்க முடியாது என்று கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்.

தொடர்ந்து திருவள்ளுவர் என்ற அடையாளமானது காவி சாயம் போன்று அரசியல் சாயம் பூசப்பட்டு தனித்த ஒருவருக்காக மட்டுமே அடையாளம் காட்டப்படும் பொழுது வள்ளுவர் அனைவருக்குமான உலகப்பொதுமறை இயற்றியவர் என்ற விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த விழாவானது நடந்து முடிந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம்" - வைரமுத்து நெகிழ்ச்சி

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

vairamuthu congratulate auto driver

 

விழுப்புரத்தை சேர்ந்த லூர்துராஜ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். 

 

அந்த ஆட்டோ ஓட்டுநரை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வியந்து போனேன்; ஆட்டோ ஓட்டுநர் கூட்டத்தில் ஓர் அதிசயம்" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

அதில், ஆட்டோ ஓட்டுநருக்கு சால்வை அணிந்து மகிழ்ந்தார் வைரமுத்து. பின்பு அவரிடம் 'இரக்கமுள்ள மனசுக்காரன்டா... நான் டாக்டர் பட்டம் வாங்க போரண்டா...' என பாடி அந்த ஆட்டோ ஓட்டுநரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் உயர்கல்வி அல்லது கல்லூரியில் அவருக்கு இடம் வாங்கி கொடுக்க அருகில் இருந்தவரிடம் அறிவுறுத்தினார். 

 

 

 

Next Story

சேலம் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ - 3 பிரிவுகளில் வழக்கு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 Salem 'Happy Street'-Case in 3 Sections

 

சென்னையில் தொடங்கிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' எனும் நிகழ்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கும் படர்ந்து தற்பொழுது ஒவ்வொரு மாவட்டமாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

 

இந்நிலையில் சேலத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக காலை 5 மணியிலிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் இளைஞர்கள் குவியத் தொடங்கினர். நிகழ்ச்சி களைக் கட்டியது ஒரு பக்கம் இருக்க, வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிறுத்தப்பட்டதால் ஒட்டுமொத்த அஸ்தம்பட்டியே நெரிசலால் திணறியது.

 

பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரம் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் கார் ஒன்றை ஓரிடத்திலிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் மற்ற போக்குவரத்து நெரிசல்களை போலீசாரால் சீர் செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது ஒன்று கூட வைத்தல், சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்தல், மின்சாதன பொருட்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது அஸ்தம்பட்டி போலீஸ்.