Thiruvalluvar Day; 10 people felicitated with awards

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை தமிழக முதல்வர் தற்பொழுது விருத்தாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

Advertisment

திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியார், அம்பேத்கர், காமராஜர், கலைஞர் உள்ளிட்டோர் பெயர்களில் 10 பேருக்கு விருதுகளை அறிவித்திருந்தார்.

Advertisment

அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சுவாமிநாதன், மெய்யநாதன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பெரியார், அம்பேத்கர் விருது பெறுவோருக்கு தலா ரூபாய் 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மற்ற ஏனைய விருதுகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

Advertisment

அம்பேத்கர் விருதை விசிக மக்களை உறுப்பினர் ரவிக்குமாருக்கு தமிழக முதல்வர் வழங்கினார். தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. கலைஞர் விருது முத்துவாவாசிக்கு வழங்கப்பட்டது. திருவள்ளுவர் விருது புலவர் படிக்கராமுவுக்கு வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா விருது எல்.கணேசனுக்கு வழங்கப்பட்டது. மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கு வழங்கப்பட்டது. திரு.வி.க விருது ஜி.ஆர்.ரவீந்திரநாத் வழங்கப்பட்டது. பாவேந்தர் பாரதிதாசன் விருது பொன்.செல்வகணபதிக்கு வழங்கப்பட்டது. முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் விருது வெ.மு.பொதியவெற்பனுக்கு வழங்கப்பட்டது.