Thiruvallur youth fell in love with a Japanese woman and married

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் கங்காதரன் - ராஜகனி தம்பதியர்கள்.இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பகுதியில் ‌குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்து வருகின்றனர்.

Advertisment

இவர்களுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்ட‌நிலையில் மகன் ராஜேஷ் பொறியியல் பட்டம் பெற்று ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் கடந்த நான்காண்டுகளாக பணிபுரிந்துவருகின்றனர். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியூகி என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்தனர்.

Advertisment

இதையடுத்து பெற்றோர் ஆசியோடு இவர்களது திருமணமானது தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமழிசையில் அமைந்துள்ள உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இந்த திருமணத்திற்கு திருமழிசை, தூத்துக்குடி, மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஆழ்த்தியது.