Advertisment

மூளைச் சாவு அடைந்த வாலிபர்; உடல் உறுப்பு தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு

thiruvallur young man organ donate 7 people got new future

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அமிதா நல்லூர் என்ற கிராமத்தைசேர்ந்தவர் சௌந்தரராஜன் (வயது 33). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கீதாலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் மிதுன் மற்றும் ஒன்றரை வயதில் கவின் என இரு குழந்தைகளும் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மாலை அலுவலகத்தில்இருந்து பணி முடிந்து வீடு திரும்பும்போது செங்குன்றம் அருகே எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி சவுந்தரராஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு இருந்துஅவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம்(04.05.2023) அவர் மூளைச்சாவு அடைந்தார்.

Advertisment

இதனால் சௌந்தரராஜனின்உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர்மற்றும் உறவினர்கள் முன்வந்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளான ஒரு சிறுநீரகம், கண்கள் மற்றும் தோல் ஆகியவை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 4 பேருக்கும், இதயம், நுரையீரல், மற்றொரு சிறுநீரகம் ஆகியவை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 3 பேருக்கும் பொருத்தப்பட்டன. மூளைச்சாவு அடைந்த சவுந்தரராஜனின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிமுதல்வர்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Doctor thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe