Advertisment

சேறும் சகதியுமான திருமழிசை சந்தை... வியாபாரிகள் போராட்டம்!!

thiruvallur thirumazhisai market

சென்னை கோயம்பேடு,கரோனாபாதிப்பு ஹாட்ஸ்பார்ட்டாக மாறியதை அடுத்து திருவள்ளூர், திருமழிசையில்தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டது. அண்மை நாட்களாகமழை பொழிந்ததால் தற்பொழுது இந்தச் சந்தைப் பகுதி சேறும் சகதியுமாக இருப்பதாகவும்,மழையால் சேறும் சகதியுமாக மாறியநிலையில்சந்தையைக் கோயம்பேடுக்கு மாற்றக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது போராட்டம் நடத்தும் வியாபாரிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

சுமார் 30 நிமிடங்களாக இந்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. திருமழிசை சந்தையில் காய்கறிகள் வாங்க வந்த சிறு வியாபாரிகள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் வியாபாரிகள் முன்வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

Chennai Market corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe