/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art img police siren 1_55.jpg)
இன்ஸ்டாகிராமில் பிரபலமானசிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது 9 வயது மகள் தனியார் பள்ளி ஒன்றில்4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் சினிமா, கானா மற்றும் கிராமிய பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த சிறுமி வீட்டில் இருந்த ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த சிறுமியின்தந்தை, கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால்பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது உயிருக்கு போராடிய நிலையில் இருந்தசிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow Us