Thiruvallur district Palavekadu area  boat incident

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து வழக்கம் போல் ஐந்து மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று (10.01.2025) கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்கள் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கடல் சீற்றமாகக் காணப்பட்டது. இதனால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்தது.

Advertisment

அப்போது படகில் இருந்த ஐந்து பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் மூன்று பேர் கடலில் நீந்திக் கரை சேர்ந்தனர். மற்ற மீனவர்களான மோகன் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் நீரில் மூழ்கியதாகக் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடலில் மாயமான இருவரையும் தேடுதல் பணியில் மற்ற மீனவர்கள் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து மீன்வளத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் மாயமான மீனவர்களில் மோகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் செல்வம் என்பவரைத் தொடர்ந்து தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்தது ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.