thiruvallur district government medical college

Advertisment

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பெரும்பாக்கத்தில் ரூபாய் 385.63 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. மேலும் 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

2019- ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் தந்த 11 அரசு மருத்துவக் கல்லூரிக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.