Advertisment

"அ.தி.மு.க.வை யாரும் வீழ்த்தமுடியாது!" - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!

thiruvallur district, admk party meeting deputy cm ops speech

அ.தி.மு.க.வை யாரும் வீழ்த்த முடியாது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கம், அதனை யாரும் வீழ்த்த முடியாது. தி.மு.க.வை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே அ.தி.மு.க.வை தொடங்கினார் எம்.ஜி.ஆர். தவறான வழியைப் பின்பற்றும் தி.மு.க.வினால் எக்காலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இந்தியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை விளங்கச் செய்தது அ.தி.மு.க. அரசு. தமிழக மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கியவர் ஜெயலலிதா. வீடு இல்லாத ஏழை மக்களுக்காக தற்போது வரை 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

Advertisment

Admk meet DEPUTY CM PANEER SELVAM Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe