தமிழகத்தில் மேலும் 526 பேருக்குநேற்றுகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் கரோனாவால்மேலும் 4 பேர் உயிரிழந்ததால் கரோனாவால்பலியானோர் எண்ணிக்கை நேற்று44 ஆக இருந்தது. இந்நிலையில்சென்னையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கரோனாஉயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த 59 வயதான மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் கரோனாபாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.அவர் இன்று காலை உயிரிழந்தார்.
அதேபோல் தற்பொழுது திருவள்ளூரில் ஒரே நாளில் 200 பேருக்குகரோனாஇருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்சென்னைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறது. சென்னையைஅடுத்துகடலூர்மாவட்டம் கரோனாபாதிப்பில் 2 ஆம்இடத்தில்இருந்த நிலையில், தற்போது இன்று ஒரே நாளில் 200 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டதால்திருவள்ளூர் மாவட்டம் சென்னை அடுத்து அதிகம் கரோனாவால்பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது.அதேபோல் இன்று பாதிக்கப்பட்ட அந்த 200 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.