Skip to main content

திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க 44 வது ஆண்டுவிழா!!

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

 

ss

 

திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் 44வது ஆண்டு விழா இன்று சங்க அவைத்தலைவர் கே.எஸ் தங்கவேல் தலைமையில் நடந்தது. சங்கத்தின் தலைவர் விபி மணி வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் பால்பாண்டியன் ஆண்டறிக்கை வாசிக்க,  பொருளாளர் காசிப்பாண்டியன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார்.

 

ss

 

அறக்கட்டளை தலைவர் குணசேகரன் தீர்மானத்தை முன்மொழிந்தார். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கினார். நினைவில் வாழும் சங்கத்தின் பெயரால்  5 பேருக்கு விருதுகளை வழங்கி நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் சிறப்பு செய்தார்கள். 

 

ss

 

வியாபாரிகள் சங்கத்தின் 44வது ஆண்டு விழா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மழை புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூ,ர் நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு ஜாதி மதம் மொழி கடந்து மனித நேயத்தை போற்றும் வகையில் பல உதவிகளை செய்த தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் குறிப்பாக வணிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஒரே தேசம் ஒரே வழி என்ற இந்தியா முழுதும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த மத்திய மாநில அரசுகள் ஒரே உரிமையில் வணிக உரிமத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும்,

 

 

ss

 

இந்தியாவில் கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் வருமானவரி சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதி பொதுமக்கள் ரயிலில் முன்பதிவு பயணச் சீட்டு பெறுவதற்கு சென்ட்ரல், எழும்பூர், மயிலாப்பூர் போன்ற நெருக்கடிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் கால நேரத்தை சேமிக்க சேப்பாக்கத்திலேயே  கணினி முன்பதிவு தொடங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை கண்டுபிடித்து அரசு தடுக்க உதவும் வகையில் வணிகர்கள் தங்கள் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும், அண்டை மாநிலங்களில் புகையிலை பொருட்களுக்கு தடை இல்லாத சூழலில் தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு முதல் பான் மசாலா குட்கா தடை செய்த அரசு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. அரசு முழுமையாக கட்டுப்படுத்த  உயர்மட்ட குழுவை உடனடியாக ஏற்படுத்தி பிரச்சனையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.தமிழரசு வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க. தமிழரசு தி.நகர் பகுதி வாக்காளர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்தார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்

Next Story

மகளுடன் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தீவிர பிரச்சாரம் (படங்கள்)

Published on 02/04/2024 | Edited on 02/04/2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'கண்டிப்பாக வர இருக்கும் தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்வீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பத்து ஆண்டுகளாக நரேந்திர மோடி இந்தியாவை ஆண்டார். குறிப்பாக 2021-க்கு முன்பு இங்கிருந்த அடிமை ஆட்சியை வைத்து தமிழகத்திற்கு ஒரு நல்ல காரியத்தையும் செய்யவிடாமல் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள்” என்றார். பிரச்சாரத்தின் போது அவரது மகளும் உடனிருந்தார்.

படங்கள் : எஸ்.பி.சுந்தர்