திருத்துறைப்பூண்டியில் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம்

v

திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலில் தென்னைமரங்கள் விழந்ததால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமம் ரயிலடி தெற்கு தெருவை சோ்ந்தவர் வீரரவி(52). இவருக்கு மரகதவள்ளி(43) என்ற மனைவியும், துர்காதேவி(23), கார்த்திகா(19) என்ற இரு மகள் உள்ளனர். வீரரவிக்கு சொந்தமாக உள்ள கொள்ளையில் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

இந்நிலையில் கஜா புயலில் வீரரவியின் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீரரவி தனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளர். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தை இரண்டு தென்னை விவசாயிகளை தொடர்ந்து தற்போது திருவாரூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

veeraravi
இதையும் படியுங்கள்
Subscribe