Advertisment

திமுக எம்.எல்.ஏ. அனிதாராதாகிருஷ்ணன் தோட்டத்தில் ரெய்டு

திருச்செந்தூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வான அனிதாராதகிருஷ்ணன் இன்று இரவு தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக திருச்செந்தூர் தேர்தல் அலுவலகத்தில் இருந்தார். இரவு சுமார் 8 மணியளவில் அவரது வீடு இருக்கும் தண்டுபத்து கிராமத்திற்கு அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அனிதா ராதாகிருஷ்ணனின் தோட்டத்தில் இருக்கும் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

Advertisment

அ

அந்த தோட்டத்தில் அந்த பகுதிக்கான திமுக அலுவலகம் திறக்கப்பட்டிருந்தது. அங்கு திமுக தொண்டர்கள் சிலர் இருந்தனர். அந்த தோட்டத்தில்தான் அனிதா ராதாகிருஷ்ணனின் வீடும் உள்ளது. வந்த அதிகாரிகள் ஆரம்பத்தில் தங்களை பறக்கும்படை பிரிவைச்சேர்ந்தவர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். இங்கே சோதனை போட வேண்டும் என்றவர்கள் அதற்கான வேலையில் இறங்கினர்.

தொண்டவர்களிடம் விவரம் கேட்டதில், அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு இல்லை என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதனையடுத்து பண்ணை வீட்டில் சோதனை நடத்த தொடங்கினர். அரைமணி நேரத்திற்கு பிறகு கட்சி தொண்டர்களிடம், முதலில் தாங்கள் பறக்கும்படை என்று தெரிவித்தவர்கள் பின்னர் வருமான வரித்துறையினர் என்று தெரிவித்தார்கள். இதையடுத்து தகவல் அனிதாராதாகிருஷ்ணனுக்கு தெரியவர, அவர் அங்கே விரைந்ததாக தகவல். சோதனை இரவு என்று பாராமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த சோதனையால் அந்த பகுதியில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.

it raid anitharathakrishnan MLA thirusenthur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe