திருபுவனம் பாமக நிர்வாகியான ராமலிங்கம் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை NIA கையில் எடுத்து பல்வேறு இடங்களில், பல கோனங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

ramalingam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகரான ராமலிங்கம் பிப்ரவரி 5 ம் தேதி கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கேட்டுவந்தனர். அதனை தொடரந்து என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஏ.டி.எஸ்.பி. சவுக்கத்அலி தலைமையில் தஞ்சை, கும்பகோணம், திருபுவனம் உள்ளிட்ட பல இடங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ராமலிங்கத்தின் மகன் மனைவியிடமும் விசாரணை நடத்தினர்.

Advertisment

ramalingam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதனை தொடர்ந்து இன்று காலை 8 மணியளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஐந்துபேர். துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஐந்துபேர், மற்றும் ஒரு வேனில் போலீஸ் என அதிரடியாக திருச்சி பாலகரையில் உள்ள திருச்சி பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு வந்தனர். 3 வது மாடியில் அமைந்துள்ள அக்கட்சி அலுவலகத்தை திறந்து மணி கணக்கில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலகரை பகுதி பரபரப்பான, மேலும் மிக முக்கியமான இடம் என்பதால், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருவது, திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடத்தும் இடங்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தியுள்னர்.

ramalingam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இது குறித்து விசாரித்தோம், "ராமலிங்கம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் திருச்சி பாலகரையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் அங்கு விசாரணை நடக்கிறது" என்கிறார்கள்.