Skip to main content

தொழிற்சாலைகளில் காவல்துறை ஆய்வு: சமூக இடைவெளி கட்டாயம் என அறிவுறுத்தல்

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
tiruppatur



திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகளை இயக்க மத்திய – மாநில அரசுகள் அனுமதி தந்துள்ளது. 30 சதவித தொழிலாளர்களுடன் பணிகளை தொடங்கலாம் எனவும், அவர்களை அழைத்து வருவதும், திரும்ப கொண்டு விடுவதோடு, அவர்களின் பாதுகாப்புக்கு உறுதி ஏற்கவேண்டும் என்கிற உத்தரவோடு அனுமதி அளித்துள்ளன.


அதனை தொடர்ந்து மே 11ந் தேதி முதல் தொழிற்சாலைகள் படிப்படியாக திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 70 நிறுவனங்கள் திறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கான தொழிலாளர்களை நிறுவனங்கள் தங்களது பேருந்துகள் மூலமாக அழைத்து வந்து வேலை செய்ய வைத்துள்ளன.


தொழிற்சாலைகளில் சரியான முறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? பாதுகாப்பாக பணி செய்ய வைத்துள்ளார்களா? என்பதை காவல்துறை வடக்கு மண்டல தலைவர் நாகராஜ் ஐ.பி.எஸ், மே 12ந் தேதி தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.


தொழிற்சாலை உரிமையாளர்களிடம், சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், அதனை காவல்துறை அடிக்கடி வந்து உறுதி செய்துக்கொள்ளும். அரசின் உத்தரவுகளை சரியாக கடைப்பிடிக்கவில்லையென்றால் நடிவடிக்கை இருக்கும் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசு ஆலை விபத்து; மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Explanation of the District Collector for Fireworks factory accident at viruthunagar

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில், இன்று (17-02-24) வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்து வந்த நிலையில், மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் என்றும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வெடி விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து ஆய்வு நடத்திய பின் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில், “விதிகளை மீறி அதிகளவு ரசாயன மூலப் பொருட்களைச் சேமித்து வைத்ததே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலை விதி மீறலைத் தடுக்க 4 குழுக்கள் கண்காணித்து வருகிறது” என்று கூறினார். 

Next Story

ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Ministers inspect the omni bus stop complex

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து நேற்று (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கோயம்பேடு ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்திற்கு பதிலாக முடிச்சூரில் அருகே உள்ள மண்ணிவாக்கத்தில் ஆம்னி பேருந்து நிறுத்த வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் அமைச்சர்கள் வளாகத்தில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.

Ministers inspect the omni bus stop complex

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேசினர். அதன்படி சேகர்பாபு பேசுகையில், “முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் 150 பேருந்துகள் நிற்கும் அளவிற்கும், 300 பேர் வரை தங்குவதற்கான இடமும், உணவகமும், அலுவலக அறைகளும், கழிவறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் பணி ஏப்ரலில் நிறைவு பெறும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என நள்ளிரவில் போராட்டம் நடத்தியதில் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகம் அளிக்கிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன ” எனத் தெரிவித்தார்.