திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 4 பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்றதாக கண்டறியப்பட்டு, அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து கரோனா உள்ளதா என்கிற சோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு நெகட்டிவ் என வந்தது.இருந்தும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது மீண்டும்உறுதியான பின்பு, ஏப்ரல் 18ந் தேதி காலை அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர் அதிகாரிகள். வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர்கள் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.