Advertisment

காய்கறி கொண்டுவந்த விவசாயி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஏப்ரல் 16 முதல் ஊரடங்குஉத்தரவு முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் இருந்து விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை செட்டியப்பணுர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேமித்து வைக்கும் இடமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

  Thiruppathur incident

இங்கு தனது நிலத்தில் விளைந்த உற்பத்திபொருட்களான காய்கறிகளை விற்பதற்காக ஏப்ரல் 16 ஆம் தேதி காலை கொண்டு வந்த, ஆலங்காயம் ஓமகுப்பம் பகுதியை சேர்ந்த உமாபதி என்கிற விவசாயி திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.இதுப்பற்றிய தகவல் அறிந்ததும் வாணியம்பாடி கிராம போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Farmers thiruppathur
இதையும் படியுங்கள்
Subscribe