arr

சிறுமிகளுக்கு தொல்லை தந்தவன்கள் கைது, சிறையிலடைப்பு, தண்டனை என பலமுறை செய்திகள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் நாட்டில் பல இருக்கின்றன.

Advertisment

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகருக்கு அடுத்து பனந்தோப்பு என்கிற பகுதியுள்ளது. இங்கு சமத்துவபுரம் உள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பம் இங்கு வசிக்கிறது. அனைத்து சாதி, மதப்பிரிவினரும் இங்கு குடியுள்ளார்கள்.

Advertisment

இங்கு ஷான்பாஷா என்பவனும் வசித்து வருகிறான். சாதாரண கூலி வேலை செய்யும் இவனுக்கு 12 பிள்ளைகள் உள்ளன. குடும்ப கட்டுப்பாடு செய்யாமல், மனைவியையும் செய்யவிடாமல் பிள்ளை பெத்துப்போடும் இயந்திரமாக மனைவியை நடத்தியுள்ளான் ஷான்பாஷா.

இந்நிலையில் நேற்று ஜனவரி 24ந்தேதி மதியம் சமத்துவபுரத்தில் விளையாடி கொண்டு இருந்த மூன்று வயது சிறுமியை பஞ்சு மிட்டாய் கொடுக்கிறேன் என கூறி தனது வீட்டுக்கு பின்புறம் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

Advertisment

அந்த குழந்தை அழுதுக்கொண்டே வீட்டுக்கு சென்றுள்ளது. அதன் பிறப்புறுப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சியான பெற்றோர், அக்கம் பக்கத்தினர் போலிசுக்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஷான்பாஷாவை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.