ADVERTISEMENT

மஜக நிர்வகி கொலை- ஆஜரான 6 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

04:58 PM Sep 20, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராகவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும் இருந்து வந்த வசீம் அக்ரமை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை அவரது அலுவலகத்தில் இருந்து துரத்தி வந்துள்ளனர். சாலையில் ஓட ஓட விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலுக்குப் பாதுகாப்பாக ஒரு விலை உயர்ந்த இனோவா கார் பின்னாடியே வந்தது. அவர்கள் வெட்டி முடித்த பின் அவர்களை ஏற்றிக்கொண்டு அந்தக்கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. வெட்டிய 6 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர்.

இந்த தகவலைக் கேள்விப்பட்டு வாணியம்பாடி நகர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். படுகொலை தகவல் காவல்துறைக்குச் சொல்லப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர் உடல் கைப்பற்றப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் வாணியம்பாடி நகரப் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொலை வழக்கில் 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் 6 பேரும் போலீசாரால் வாணியம்பாடி கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஆஜரான பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வக்குமார் ஆகிய 6 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT