''அராஜகம்... ஓவர் அராஜகம்...''-ரத்தான தேர்தல்;தர்ணாவில் கவுன்சிலர்கள்!

thirupathur local election

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டின்றி தேர்வாகிவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி தேர்தலில் கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நகராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கோரி 26 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வளாகத்திலிருந்த கவுன்சிலர் ஒருவர் ''அராஜகம் ஓவர் அராஜகம்... ரொம்ப அநியாயம் நடக்குது சார் உள்ளே...'' என கூச்சலிட அங்கு மேலும் பதற்றம் தொற்றியுள்ளது.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில்திமுக-அதிமுகவினரிடையேஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் லேசான தடியடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ambur thirupathur
இதையும் படியுங்கள்
Subscribe