திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான கோவிந்தராஜ். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் அடமானமாக வைத்து 5 வருடங்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை தவணை முறைியல் திரும்ப செலுத்தியுள்ளார். கடனை செலுத்தியபின் தனது நிலத்தின் பத்திரங்களை திருப்பி கேட்டுள்ளார்.

Advertisment

thirupathur incident... police arrest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதோ, அதோ என கடந்த 3 மாதத்துக்கும் மேலாக இழுத்தடித்துள்ளனர். இந்நிலையில் மார்ச் 20ந் தேதி மதியம் தனது மனைவி லட்சுமியுடன் வந்து வங்கி மேலாளரை சந்தித்து தனது நிலத்தின் பத்திரத்தை கேட்டுள்ளார். அவர் எடுத்தெரிந்து பேசியதால் வேதனையடைந்துள்ளனர் தம்பதிகள்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் வங்கிக்கு வெளியே கிருஷ்ணகிரி – வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் சென்றதும், அங்கிருந்து வந்த காவலர்கள் முதியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

]

thirupathur incident... police arrest

முதியோர்களுக்கு ஆதரவாக பேசிய திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரை திருப்பத்தூர் நகர போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். இப்போ எழுந்திருக்கலன்னா உங்களை கைது செய்வோம் என அந்த முதியவர்களை மிரட்டி போலீஸார் மறியலை கைவிட செய்தனர். இதுப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் குளுகுளு அறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும்.