
அக்காள் மகள் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தாய்மாமனே கொலை செய்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் அவரின் சகோதரியின் மகளை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சரண்ராஜூக்கு 35 வயது ஆகிவிட்டது. தன்னைவிட 17 வயது குறைவான வயது கொண்ட அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பிய அவர் வீட்டில் பெண் கேட்டுள்ளார். ஆனால் சகோதரி கட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார்.
இருப்பினும் அடிக்கடி சகோதரி வீட்டுக்கு சென்று தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் அக்காள் மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குச் சென்ற சரண்ராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் அவர் மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில்சரண்ராஜை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் கொலை செய்த சரண்ராஜ்எந்தவொருகுற்ற உணர்ச்சியும் இல்லாமல் டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். போலீசார் பிடித்து விசாரித்ததில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். சகோதரி மகளை தாய்மாமனே கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)