Advertisment

உத்தரவை மதிக்காத அதிகாரிகள்; நூதன முறையில் கண்டித்த ஆட்சியர்

thirupathur collector action taken by monday petition delay coming officials

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாரம் தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதுண்டு. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தங்களது குறைகளை மனுக்களை எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர் இதன் காரணமாக இந்த நிகழ்வில் அனைத்து துறை அதிகாரிகளும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

Advertisment

இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்ததிலிருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு 9 மணிக்கு எல்லாம் அனைத்து துறை அதிகாரிகளும் வர வேண்டும் என கூறியிருந்தார். அதனைப் பொருட்படுத்தாத சில அதிகாரிகள் இன்று தாமதமாக வந்தனர் அதன் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்து குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்தினார்.

Advertisment

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஒரு சில அதிகாரிகள் மட்டுமே உள்ளே இருந்தனர். இதன் காரணமாக ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பரபரப்பாககாணப்பட்டது.

monday thirupathur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe